Monday, 18 July 2011

இனிய இதயங்களுக்கு

வேற்றுமொழி பிரச்சனையால்
எனது இலச்சியத்தின் முதற்படியான
கல்லூரி நுழைவிற்கு
தயங்கி தன்னம்பிக்கையற்றிருந்த என்னை
ஊகக்கமளித்து நம்பிக்கை ஊட்டி
நுழைவுத்தேர்வில் சித்தியடைய தூண்டிய
என் இனிய இதயங்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்....!

உண்மையான நட்பு...!

 காலத்தின் விதியால்
கயவர்களின் சதியால்
புதைக்கப்பட்டிருந்த நம் நட்பு
ஆயிரமாயிரம் இடர்களையும்
முட்டி மோதி எதிர் நீச்சல் போட்டு
கரைய தொடப்போகும் நட்பே நம் நட்பு
ஒரு சில வருடங்களானாலும்
கடல் கடந்து வந்தும் தொடரும்
என்றும் அழியாத உண்மையான நட்பு
நம் நட்பு

Wednesday, 29 June 2011

என்னுயிர் தோழி......

அன்பில் அன்னையிலும் மேலான
அரவணைப்பில் தந்தையிலும் மேலான
அக்கறையில் சகோதரங்களிலும் மேலான
இன்பங்களிலும் துன்பங்களிலும்
என்னுடனே இருந்து-என்னை
நல்வழிப்படுத்திக் கொண்டிருக்கின்ற
எனக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட
ஒரே ஒரு வெகுமதி
என்னுயிர் தோழி

Tuesday, 28 June 2011

வாழ்க்கையின் வெற்றிக்கு....

எத்தனையோ விதமான ஏமாற்றம உண்டு இவ்வுலகில்-ஆனால் அதற்கு மருந்து என்ற ஒன்று உண்டு . மருந்தே இல்லா ஏமாற்றமும் உண்டு அது தான் காதல் கொடுமையிலும் கொடுமையான நரகவேதனை காலத்தாலும் அழியாத ரணவேதனை இதிலிருநது மீள்வதென்றால் கடுமையிலும் கடுமையான ஒரு சாபம்-ஆனால் அதிலிருந்து மீணடாயானால் அது தான் உனக்கு கிடைத்த சாபவிமோசனம் உன் வாழ்க்கையின் வெற்றிக்கு....

பெண்ணே...!

காதலை தேடி நீ போகாதே
அது ஓர் நாள்
உன்னை சாகடிக்கும்
உன்னை தேடி வரும்
உண்மைக்காதலை காதலி-அது
உன்னை மட்டுமல்ல 
உன் காதலையும் வாழவைக்கும்.