Monday 18 July 2011

இனிய இதயங்களுக்கு

வேற்றுமொழி பிரச்சனையால்
எனது இலச்சியத்தின் முதற்படியான
கல்லூரி நுழைவிற்கு
தயங்கி தன்னம்பிக்கையற்றிருந்த என்னை
ஊகக்கமளித்து நம்பிக்கை ஊட்டி
நுழைவுத்தேர்வில் சித்தியடைய தூண்டிய
என் இனிய இதயங்களுக்கு
என் மனமார்ந்த நன்றிகள்....!

உண்மையான நட்பு...!

 காலத்தின் விதியால்
கயவர்களின் சதியால்
புதைக்கப்பட்டிருந்த நம் நட்பு
ஆயிரமாயிரம் இடர்களையும்
முட்டி மோதி எதிர் நீச்சல் போட்டு
கரைய தொடப்போகும் நட்பே நம் நட்பு
ஒரு சில வருடங்களானாலும்
கடல் கடந்து வந்தும் தொடரும்
என்றும் அழியாத உண்மையான நட்பு
நம் நட்பு